மகளிர் விடியல் புதிய பேருந்து தொடக்கம்

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து சிங்கம்புணரி வழித்தடத்திற்கு மகளிர் விடியல் பயண புதிய பேருந்து சேவையை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த புதிய பேருந்து, முன்னர் இயங்கிய திருப்பத்தூர் – சிங்கம்புணரி பேருந்தின் மாற்றியமைக்கப்பட்ட சேவையாகும். மகளிர் பயண வசதியை மேம்படுத்தவும், பெண்களின் தற்சார்பு நிலையை உயர்த்தவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர், முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.