தொழிலாளிமர்மமான முறையில் உயிரிழப்பு

4பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குண்டேந்தல்பட்டியில் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக தங்கியிருந்த நெய்வேலியைச் சேர்ந்த தொழிலாளி சிவகுமார் (44) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்ததும், அருகில் ரத்தக்கறை படிந்த கடப்பாரை மற்றும் கம்புகள் கிடந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருடன் தங்கியிருந்த பிரபா மற்றும் செல்வம் ஆகியோர் சம்பவத்திற்குப் பிறகு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி