
பால்குடம் எடுத்து வந்து சுவாமியை வழிபட்ட பக்தர்கள்
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சண்முகநாதருக்கு காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேவகோட்டை, காரைக்குடி, பாதரகுடி, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 'அரோகரா அரோகரா' கோஷமிட்டு பாதயாத்திரையாக வந்து, மலையடிவாரத்தில் பால்குடம் மற்றும் காவடி எடுத்து மலை ஏறி சண்முகநாதரை தரிசனம் செய்தனர்.

























