நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10-ம் தேதி வெளியாகவுள்ள 'பராசக்தி' திரைப்படத்திற்கு தணிக்கை குழுவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த காட்சிகள் மற்றும் சில முக்கிய வசனங்களுக்கு தணிக்கைக் குழு அதிக அளவில் கத்தரி போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தணிக்கைக் குழுவின் இந்த முடிவை ஏற்காத படக்குழு, அக்காட்சிகளை மீண்டும் இணைக்கக் கோரி தற்போது ரிவைஸிங் கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளது.