தமிழகத் தேர்தல் களத்தில், இம்மானுவேல் சேகரனார் மிஷன், அம்பேத்கர் முன்னணி கழகம் மற்றும் சென்னை துறைமுகம் எஸ்.சி., எஸ்.டி. தொழிலாளர் சங்கம் ஆகிய சிறு அமைப்புகள் திமுக கூட்டணிக்குத் தங்களது ஆதரவை அறிவித்துள்ளன. மேலும், பல்வேறு மாவட்ட அளவிலான அமைப்புகளும் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்குத் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றன.