கர்நாடகாவின் விஜயபுரா பகுதியில் சிறிய ரக தனியார் விமானம் இன்று (பிப்., 08) வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பைலட் உள்ளிட்ட 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த விமானக் குழுவினர், போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விமானம் விபத்தில் சிக்கியதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.