ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் புகைப்பிடிப்பதற்கு பாரபட்சமின்றி முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த தடையை மீறி சென்னை
எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதன் பகுதிகளில் புகைப்பிடித்த 219 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருதியும், விபத்துகளை தவிர்க்கவும் ரயில்வே காவல்துறை மற்றும் அதிகாரிகள் சோதனையைத தீவிரப்படுத்தியுள்ளது.