உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. இந்நிலையில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது காதலன், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடினார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் நவம்பர் 20-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.