இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் நேற்று (நவ.23) நடைபெறவிருந்த நிலையில், ஸ்மிருதியின் தந்தை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மன அழுத்தத்தால் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இருவரும் குணமடைந்துள்ளனர். இதேநேரம், ஸ்மிருதி திருமணப் புகைப்படங்கள் உள்ளிட்ட பதிவுகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளார்.