தமிழகம் முழுவதுமே பாம்புகடி பிரச்னை இருப்பதால், பல்வேறு தொகுதிகளிலும் தோஷம் இருப்பதாக அறிகிறேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். சட்டப்பேரவையில் இன்று பேசியபோது, நாகதோஷம் கழிக்க ஏதாவது பிராத்தனை செய்ய மக்கள்நல்வாழ்வுத்துறை முன்வருமா என கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், நமது முதலமைச்சர் தலைமையிலான அரசு அறிவியல்பூர்வமாகவே செயல்படுகிறோம். தோஷம், பில்லி, சூனியத்தில் நமக்கு நம்பிக்கை கிடையாது என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.