'கர்நாடகத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் சமூகநீதியைப் பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்' என தமிழக அரசுக்கு பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், ‘மத்திய அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஓபிசி விவரங்களை மட்டுமே சேகரிக்கும், இது சமூக நிலையை அறிய உதவாது. கர்நாடகா (54 கேள்விகள்) மற்றும் தெலுங்கானா (75 கேள்விகள்) நடத்தியது போல், தமிழ்நாட்டிலும் விரிவான சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இது 69% இட ஒதுக்கீட்டை எதிர்கொள்ளவும் உதவும்” என்றார்.