பொதுவாக சூரிய கிரகணத்தின்போது அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது என பல கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில், உறங்குவது, சமைப்பது, உண்பது, தண்ணீர் அருந்துவது கேடு விளைவிக்கும். கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவது, சூரியனை பார்ப்பது ஆபத்து, கூர்மையான பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பவையாகும். இந்த நம்பிக்கைகளுக்கு முறையான அறிவியல் ஆதாரம் இல்லை என்பதே உண்மை.