தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.6) வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அமைச்சர் வினோத், 1,000 விவசாயிகளுக்கு 80 சதவீத மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகளின் தரத்தை உறுதிசெய்யும் வகையில், 'கியூ ஆர்' (QR Code) குறியீட்டுடன் கூடிய புதிய விதைச் சான்றிதழ்கள் வழங்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.