ஆமை வேகத்தில் செயல்படும் கூகுள் குரோம் பிரவுசரை, அதன் 'ஃபிளாக்ஸ்' அமைப்புகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்கு மாற்ற முடியும். பெரிய ஃபைல்களை வேகமாக பதிவிறக்க 'பேரலல் டவுன்லோடிங்' மற்றும் இணைய பக்கங்கள் தடையின்றி இயங்க 'ஜிபியு ராஸ்டரைசேஷன்' போன்ற நுட்பங்களை ஆக்டிவேட் செய்வதன் மூலம் வேகத்தை அதிகரிக்கலாம். மேலும், 'ஜீரோ காப்பி' மற்றும் 'பேக்-ஃபார்வர்டு கேச்' ஆகிய அம்சங்கள் ரேம் பயன்பாட்டை குறைக்க உதவும்.