பாமக தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து, பல்வேறு மோதல்களில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம், ‘ஆவணங்கள் அடிப்படையில் அன்புமணி தான் பாமக தலைவர்’ என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், இதுகுறித்து அன்புமணி இன்று (பிப்.10) கூறுகையில், “கட்சியும் சின்னமும் நமக்கே சொந்தம். ஆனால், ராமதாஸிடம் பொய் சொல்கின்றனர். ராமதாஸை சுற்றி உள்ளவர்கள் அவரிடம் பொய்யாகக்கூறி மனதை மாற்றுகின்றனர். ராமதாஸை சுற்றி சில துரோகிகள் உள்ளனர். அதில் முக்கியமானவர் ஜி.கே.மணி” என்றார்.