சென்னை முகப்பேர் பகுதியில் தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். நிகில் பிரிட்டோ (28) என்பவர் பெங்களூரில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். தாய் ஆக்ஸிலா (55) தொடர்ந்து மகனிடம் வேலைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இன்று ஏற்பட்ட தகராறில் தாயை நிகில் பிரிட்டோ கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசார் நிகிலை கைது செய்தனர்.