கர்நாடகா பெலகாவியில் தாயுடன் முறையற்ற உறவில் இருந்த நபரை இளைஞர் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயின் உறவு குறித்து கண்டித்தும் அது தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், பசப்பா (54) என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். பின்னர் உடல் மீது கால் வைத்து செல்பி எடுத்துவிட்டு போலீசில் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.