பிரிட்டனின் ராயல் சொசைட்டி அமைப்பில் உறுப்பினராக இந்திய விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் சேர்க்கப்பட்டுள்ளார். 365 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவில் இருந்து தேர்வாகியுள்ள இரண்டாவது பெண் என்ற பெருமையை இவர் பெற்று சாதனை படைத்துள்ளார். சௌமியா சுவாமிநாதன் சென்னையில் பிறந்தவர், இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் இந்தியக் கல்வியாளர்களில் பிரபலமான மீனா சுவாமிநாதன் ஆகியோரின் மகள் ஆவார்.