ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்ற தென் ஆப்பிரிக்காவில், வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் புளோரிடாவில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "தென் ஆப்பிரிக்காவில் சிறுபான்மை இன மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறது. எனவே, ஜி-20 கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க தென் ஆப்பிரிக்காவுக்கு தகுதி இல்லை.இந்த மனித உரிமை மீறல் தொடரும் வரை அமெரிக்க அதிகாரிகள் யாரும் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்கள்" என கூறினார்.