கோவை கொடிசியா மைதானத்தில் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு நாளை (நவ.19) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருது வழங்குகிறார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ள நிலையில், பிரதமரின் வருகையையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.