தென்மேற்கு பருவமழை மே 26-ல் கேரளாவில் தொடங்க வாய்ப்பு

6466பார்த்தது
தென்மேற்கு பருவமழை மே 26-ல் கேரளாவில் தொடங்க வாய்ப்பு
இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே 26-ல் கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ல் தொடங்கும் இப்பருவமழை இந்த முறை முன்கூட்டியே தொடங்குகிறது. நாட்டின் 70% மழைப்பொழிவைத் தரும் இக்காலத்தில், இந்த ஆண்டு இயல்பை விடக் குறைவான மழையே பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. சராசரி அளவான 87 செ.மீ.-க்கு பதிலாக, இந்த ஆண்டு 80 செ.மீ. மட்டுமே மழை பெய்யக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி