இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து இன்று (ஜூன் 11) மாலை 5.30 மணிக்கு ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆக்சிஜன் லீக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தினால், ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.