17-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (மே 10) காலை 9 மணிக்கு தொடங்குகிறது, இதில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு
பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தங்களின் வெற்றி சான்றிதழை அவசியம் கொண்டு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வரும் மே 12-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையின் புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும்.