வார இறுதி மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு, நாளை (ஏப்.10) முதல் 5 நாட்களுக்கு 2,119 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் இப்பேருந்துகளில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் TNSTC இணையதளம் அல்லது செயலி வாயிலாகத் தங்கள் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.