4ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள்: டிரைவர், கண்டக்டர்களுக்கு லீவே இல்லை

34பார்த்தது
4ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள்: டிரைவர், கண்டக்டர்களுக்கு லீவே இல்லை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மண்டலம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. சேலம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக 4.11.2026 முதல் 12.11.2026 வரை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சேலத்தில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை, நாகர்கோவில், நெல்லை, சென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி