வார இறுதி பயணிகள் நெரிசலை குறைக்க தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது. நாளை 10,774 பேர், மறுநாள் 4,682 பேர், ஞாயிறு 9,663 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.