சுபமுகூர்த்த தினம் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இன்று (ஜூன் 4) முதல் 4 நாட்களுக்கு 885 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. எனவே, இந்த விடுமுறை நாட்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள், உடனே தங்களது பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.