சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு கடையில், மஞ்சள் நிறப் புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சியை கலந்து பிரத்யேக காஃபி விற்பனை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.530-க்கு விற்கப்படும் இந்தக் காஃபி, ரத்த ஓட்டத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் சிறந்தது எனக் கூறப்படுகிறது. மேலும், அந்நாட்டு இளைஞர்கள் இந்தக் காஃபியை அதிகம் விரும்பி வாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது.