16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் எடியூரப்பா, டிச., 2ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 2024-ல் கல்வி உதவித்தொகை கோரி தன்னை சந்திக்க வந்த சிறுமிக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. தன் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா தாக்கல் செய்த மனு அண்மையில் தள்ளுபடியானது.