கன்னியாகுமரி நாகர்கோவிலில் இருந்து 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06196) அன்று இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. 20 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரயில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இது பயணிகளுக்கு கூடுதல் வசதியை அளிக்கும்.