நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

4159பார்த்தது
நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
நாளை (22 ஆம் தேதி) சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06072) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் பிற்பகல் 01.25 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு, பல்வேறு நிறுத்தங்கள் வழியாக திருச்சிக்கு இரவு 07.35 மணிக்கு வந்து சேரும். திருச்சியில் இருந்து அதிகாலை 02.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். முன்பதிவு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்குகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி