பயணிகளின் வசதிக்காகக் கச்சிகுடா-மதுரை மற்றும் ஐதராபாத்-கன்னியாகுமரி இடையேயான சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை வரும் பிப்ரவரி மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கச்சிகுடா-மதுரை சிறப்பு ரயில் (07191/07192) பிப்.2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐதராபாத்-கன்னியாகுமரி சிறப்பு ரயிலும் (07230/07229) பிப்.4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.