சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகும் ஸ்பிரிட் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் பிரபாஸ் நாயகனாகவும், திருப்தி டிம்ரி நாயகியாகவும் நடித்துள்ளனர். பத்ரகாளி பிக்சர்ஸ் – டி சீரிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். விவேக் ஓபராய் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு போஸ்டரை வெளியிட்ட இயக்குநர், “இந்திய சினிமா தனது ஆஜானுபாகுவை காணும்” என குறிப்பிட்டுள்ளார்.