காடுகள் உருவாகக் காரணமாக அமையும் அணில்கள்

27பார்த்தது
காடுகள் உருவாகக் காரணமாக அமையும் அணில்கள்
சுறுசுறுப்பான பாலூட்டி உயிரினமான அணில்கள், உணவிற்காக நிலத்தில் புதைத்து வைக்கும் கொட்டைகளை மறந்து விடுவதன் மூலம் உலகின் எண்ணற்ற மரங்கள் உருவாவற்கு காரணமாக அமைகின்றன. அணில்களின் முன்பற்கள் ஆயுள் காலம் முழுவதும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருப்பதால், அவற்றை கூர்மையாக வைத்திருக்க தொடர்ந்து மர கிளைகளை கடித்துக்கொண்டே இருக்கின்றன. இவை உயரமான இடங்களில் இருந்து கீழே விழுந்தாலும் அடர்த்தியான வாலை 'பாரசூட்' போல பயன்படுத்தி பாதுகாப்பாக தரையிறங்கும் திறன் பெற்றவை.

தொடர்புடைய செய்தி