ஐபிஎல் 2026-ன் 67-வது லீக் போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 79 ரன்களும், அபிஷேக் சர்மா 56 ரன்களும், கிளாசன் 51 ரன்களும் எடுத்தனர். புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க 90 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் அணி உள்ளது.