தமிழகம் முழுவதும் பிரபலமான ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில், நெய்க்கு பதிலாக வனஸ்பதி பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து, மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்னை மற்றும் கோவையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னை வருவாய் அலுவலகம் அந்நிறுவனத்திற்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.