ஐசிசி நேற்று (மே 29) வெளியிட்ட புதிய ஆண்கள் டி20 தரவரிசை பட்டியலில், இந்திய
கிரிக்கெட் அணி 275 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து
அசத்தியுள்ளது. இப்பட்டியலில் இங்கிலாந்து அணி 262 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும்,
ஆஸ்திரேலியா 258 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றன. நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா,
பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள நிலையில், தரவரிசையின் முதல் 7 இடங்களில் எவ்வித மாற்றமும் இன்றி அதே நிலையை அணிகள் தொடர்கின்றன.