டி20 உலகக் கோப்பையில் இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நடைபெற்றது. இதில் முதல் பேட்டிங் செய்த AUS அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி 18 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளைய போட்டியில் ஜிம்பாப்வே அயர்லாந்தை வீழ்த்தினால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.