தமிழக மீனவர்கள் 14 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படை

5864பார்த்தது
தமிழக மீனவர்கள் 14 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படை
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து வைத்த சம்பவம் மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவது குறித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி