இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா, நாளை (அக்.16) மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இலங்கையின் பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின்போது, அவர் பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு நலன்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த வருகை, இந்தியா-இலங்கை இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.