மோடியை சந்தித்த இலங்கை பிரதமர்.. ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை

4725பார்த்தது
மோடியை சந்தித்த இலங்கை பிரதமர்.. ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை
டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூா்யா இன்று (அக்.17) சந்தித்தார். அப்போது கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்க மேம்பாடு, மீனவர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா-இலங்கை இடையேயான சிறப்பு உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இருநாடுகளின் பகிரப்பட்ட வளர்ச்சிப் பயணத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்தார்.