மத்தியப்பிரதேசத்தில் கோல்டிரிப் இருமல் மருந்து அருந்திய 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான சம்பவத்தில், காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வந்த ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்களை முழுவதுமாக ரத்து செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மருந்தில் தடை செய்யப்பட்ட நச்சு ரசாயனம் கலந்து இருந்தது உறுதி செய்யப்பட்டதால், கோல்ட்ரிப் மருந்து தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.