"பொய்யை கட்டமைக்கும் ஸ்டாலின்".. இபிஎஸ் குற்றச்சாட்டு

28பார்த்தது
"பொய்யை கட்டமைக்கும் ஸ்டாலின்".. இபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 7.5% உள் ஒதுக்கீட்டை திமுக அழுத்தத்தால் அதிமுக அரசு கொண்டுவந்தது போன்ற ஒரு பொய்யை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் அதிமுக அரசு அமல்படுத்தியது. அதையே உல்டாவாக்கி, தாங்கள் புதிதாக கொண்டுவந்தது போல, ஸ்டாலின் தம்பட்டம் அடித்து வருகிறார்” என்றார்.

தொடர்புடைய செய்தி