‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நாட்கள் நீட்டிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் இன்று (டிச., 27) நடைபெற்ற முகாமில் ஆய்வு மேற்கொண்ட அவர், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெற்று வந்த முகாம்கள் இனி வியாழக்கிழமைகளிலும் நடைபெறும். இதுவரை 800 முகாம்கள் நடைபெற்று அதில் 12.36 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.