அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையாக விமர்சனம் செய்தார். துரோகியின் அடையாளமாக ஸ்டாலின் காட்டப்படுகிறார் என்றும், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டதாக குற்றம்சாட்டினார். தன்னுடைய கேள்விகளுக்கு திறமை இருந்தால் முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்றும், அவரது ஆட்சியில் தமிழ்நாடு தலைநிமிரவில்லை, தலை குனிந்துள்ளது என்றும் கூறினார்.