போட்டித்தேர்வுகள் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்., 13) வழங்கினார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எதிர்காலத்துக்கான உத்தரவாதமாகவும் இந்த பணி நியமன ஆணைகள் இருப்பதாகவும், டிஎன்பிஎஸ்சி மூலம் இதுவரை 45,126 பேர் அரசு பணிகளில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். திராவிட மாடல் அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.