300 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம்

47பார்த்தது
300 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம்
பிரபல சர்வதேச காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், அமெரிக்காவில் உள்ள தனது நிறுவன அலுவலகங்களில் பணியாற்றி வந்த 300 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக விற்பனை சரிவு மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நிர்வாக அமைப்பை மறுசீரமைக்கும் முயற்சியாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி