பழனி கோயில் நில விவகாரத்தில் சார் பதிவாளர் கைதுக்கு தடை

22பார்த்தது
பழனி கோயில் நில விவகாரத்தில் சார் பதிவாளர் கைதுக்கு தடை
பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை வரும் ஜூலை 17-ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஜஸ்டினுக்கு, உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தற்காலிக நிவாரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி