தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகள் அறிமுகம் செய்யப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், சாமந்தி சாகுபடியை ஒளியூட்டி ஊக்குவித்தல், பழ உறைகள், குலை உறைகள், பசுமைக் குடில், நிழல்வலை குடில், நிரந்தரப் பந்தல் அமைத்தல், வாழை விழாமல் இருக்க முட்டுக் கொடுத்தல் உள்ளிட்ட முறைகளுக்காக ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.