தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81.65 புள்ளிகள் குறைந்து 25,492.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தொலைத்தொடர்பு குறியீடு 1% உயர்ந்தாலும், பொதுத்துறை வங்கி, எண்ணெய் & எரிவாயு, உலோகம், ரியல் எஸ்டேட் துறைகள் 0.5 முதல் 1.5% வரை சரிந்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஓஎன்ஜிசி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் விலை குறைந்துள்ளன. சென்செக்ஸ் மிட்கேப் குறியீடு 0.6%, ஸ்மால்கேப் குறியீடு 0.3% சரிந்தன.